ஐக்கிய மக்கள் சக்தியின் வடகொழும்பு தொகுதி வேட்பாளர்களின் பெயரை நீக்கியமைக்கு எதிர்ப்பு

0
138

ஐக்கிய மக்கள் சக்தியின் வடகொழும்பு தொகுதி வேட்பாளர்களின் பெயரை நீக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியின் வடகொழும்பு ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ள10ராட்சிமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக வடகொழும்பு தொகுதியில் போட்டியிடுவதற்காக கட்சியின் தலைமையகத்தில் கையளிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில், சிலரது பெயர் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக வேறு சிலரது பெயர் உள்வாங்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் வடகொழும்பு தொகுதி அமைப்பாளர் சி.வை.பி.ராம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியின் வடகொழும்பு தொகுதி ஆதரவாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

வடகொழும்பு தொகுதிக்கான தங்களது வேட்பாளர்களை மீளவும் பட்டியலில் இணைத்துக்கொள்ளுமாறு ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது கட்சியின் லுனுபொக்குன தொகுதி அமைப்பாளர் கே.எல்.சுரஞ்சி லக்சிறி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இவ்விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் வடகொழும்பு தொகுதி அமைப்பாளர் சி.வை.பி.ராமை தொடர்புகொண்டு கேட்டபோது,

உள்ள10ராட்சிமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கொழும்பு மாநகரசபைக்கு வடகொழும்பு தொகுதியில் போட்டியிடுவதற்காக இருந்த சிலரது பெயரை டிபெக்ஸ் செய்துவிட்டு ஐக்கிய தேசியக் கட்சியால் விரட்டியடிக்கப்பட்ட சிலரது பெயரை அதற்கு உள்வாங்கியுள்ளனர் என்று குற்றஞ்சாட்டினார்.