முயல் ஆமையை பார்த்ததைபோன்றே அனைவரும் பார்த்தனர் – பெரமுன எம்.பி

0
164

உள்ளூராட்சிமன்ற தேர்தல் விடயத்தில் முயல் ஆமையை பார்த்ததை போன்றே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை சகலரும் பார்த்தனர் என்றும் எனினும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனநாயக ரீதியில் உள்ளூராட்சிமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராக உள்ளது என்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பிலேயே நாட்டில் இன்று அதிகமாக பேசப்படுகின்றது.

உள்ளூராட்சிமன்ற தேர்தல் விடயத்தில், முயல் ஆமையை பார்த்ததை போனறே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை சகலரும் பார்த்தனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் பெரும்பாலான உறுப்பினர்கள் உள்ளூராட்சிமன்றங்களில் இருந்தாலும் அவர்கள் யாரும் இம்முறை தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றே சகலரும் நினைத்தனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிரான முதலாவது சுலோகமாக இதுவே காணப்பட்டது.

எனினும் என்ன நடந்தது?

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த உள்ளூராட்சிமன்றத்துக்கு தெரிவான 3,229 உறுப்பினர்களில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இம்முறையும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.