கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, படகுச் சின்னத்தில் போட்டியிடுவதாக, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்திருந்த நிலையில், அதனை மறுத்து, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
தனித்தே இம்முறை தேர்தலுக்கு முகங்கொடுப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.