கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றியை இம்முறை தேர்தலிலும் பெற்றுக்கொள்வோம் – மொட்டு கட்சி

0
135

2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சிமன்ற தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றியை இம்முறை தேர்தலிலும் பெற்றுக்கொள்வோம் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்ற முறையில் 250 உள்ளூராட்சிமன்றங்களுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளோம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பாக மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்பாளர் பட்டியல்களை தாக்கல் செய்தோம்.

நாங்கள் தாக்கல் செய்த எந்த வேட்புமனுக்களும் நிராகரிக்கப்படவில்லை.

கட்சி என்ற முறையில் எமது பொறுப்புகளை சிறந்த முறையில் நிறைவேற்றியுள்ளோம்.

அதேபோன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எமது கட்சியுடன் கூட்டணி அமைத்துக்கொண்டுள்ள கட்சிகள் கூட்டணி என்ற முறையில் வேறு சின்னத்தில் போட்டியிடுகின்றன.

இம்முறை உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்ற முறையில் வெற்றிபெறுவதற்கு தேவையான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம்.

இது உண்மையில் தொகுதிகளுக்கான தேர்தலாகக் காணப்படுகின்றது. 2018ஆம் ஆண்டு நாம் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வரலாற்று ரீதியிலான வெற்றியை பெற்றோம்.

அந்த வெற்றியை போன்றே இம்முறை உள்ள10ராட்சிமன்ற தேர்தலிலும் வெற்றிபெறுவோம் என்று எதிர்பார்க்கின்றோம்.

அரசாங்கம் என்ற முறையில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை எம்மீது முன்வைக்கின்றனர்.

தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகக் கூறுகின்றனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்ற முறையில் தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தாயாராகவே இருக்கின்றோம்.

எமது கட்சியே முதலாவதாக வேட்பாளர் பட்டியலை தாக்கல் செய்தது. வைப்பு பணத்தை கட்டியது. எனவே தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் பின்வாங்கவில்லை.