அரசாங்கத்தின்அசாதாரண வரிச் சுமையைக் கண்டித்து கல்முனையில் ஆர்ப்பாட்டம்

0
174

அரசாங்க உத்தியோகத்தர்களின் சம்பளத்திற்கான வரி விதிப்பு சம்மந்தமாக தொழில் வல்லுனர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை அம்பாறை
கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு முன்பாக நடாத்தியது.
‘அநீதியான அரசின் தன்னிச்சையான மக்களுக்கு பாதகமான வரிக்கொள்கையை கண்டிப்போம்’ எனும் தொனிப்பொருளில் பல்வேறுபட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து இக் கண்ட ஆரப்பட்டத்தினை
மேற்கொண்டனர்.
அதிகரித்த வரிகளை வசூலிப்பதன் மூலம் பொதுத்துறையில் பணியாற்றும் தொழில்வாண்மைமிக்கோருக்கான ஊதியத்தினை குறைப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல் ,
அவ்வாறு வரிகள் விதிக்கப்படுவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காகத்தான் என்ற போலியான பிரச்சாரத்தினையும் முன்னெடுத்து வருகின்றது என்றும் ஆர்ப்பாட்டத்தில்
பங்கேற்றவர்கள் குற்றஞ்சாட்டினர்.
திணிக்காதே திணிக்காதே வரியினை திணிக்காதே!,வெளியேற்றாதே வெளியேற்றாதே மூளைசாலிகளை வெளியேற்றாதே!, அடிக்காதே அடிக்காதே மக்களின் வயிற்றில் அடிக்காதே! போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட
சுலோகங்களையும் முன்வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம், இலங்கை மின்சார சபை ஊழியர்கள், சங்கம் வைத்தியர்களின் சங்கம் ஆகிய தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டமை
குறிப்பிடத்தக்கது.