துருக்கியில் உள்ள இலங்கையர்களின் நிலை!

0
146

துருக்கியில் பாரிய நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ள நிலையில் அங்குள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 9 இலங்கையர்கள் உள்ளதாகவும், அவர்களில் 8 பேருடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாக துருக்கிக்கான இலங்கை தூதுவர் அசாந்தி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அவர்களுடன் தொடர்ந்தும் இலங்கை தூதரகம்; தொடர்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மற்றுமொரு நபரான பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் இடம்பெறுவதுடன் நில அதிர்வில் சேதமடைந்த கட்டிடத்தில் குறித்த நபர் இருந்திருக்கவில்லை எனவும் துருக்கிக்கான இலங்கை தூதுவர்; தெரிவித்துள்ளார்.