கல்வியங்காடு சந்தையில்அங்கீகரிக்கப்படாத நிறுக்கும் கருவி பாவித்தோருக்கு சட்ட நடவடிக்கை!

0
193

கல்வியங்காடு மீன் சந்தையில்அங்கீகரிக்கப்படாத, நிறுக்கும் கருவி பயன்படுத்தி வியாபாரத்தில் ஈடுபட்ட 13 வியாபாரிகளுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்களால்  நேற்று கல்வியங்காடு மீன்சந்தையில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 அங்கு வியாபார நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட நிறுக்கும் கருவிகளை பரிசோதித்த போது, அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தினரால்  

அங்கீகரிக்கப்படாத, வியாபாரத்திற்கு பயன்படுத்தமுடியாத 13 நிறுக்கும் கருவிகளை வியாபாரிகள் பயன்படுத்தியமை. கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட திணைக்களத்தினரால்  நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது.