4 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச!

0
158

லங்கா சதொச, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 4 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இதன்படி, வட்டானா பருப்பு ஒரு கிலோகிராமின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 305 ரூபாவாகவும், சிவப்பரிசி கிலோ ஒன்றின் விலை 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில். அதன் புதிய விலை 164 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் வெள்ளை பச்சை அரிசி கிலோ ஒன்று 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 179 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் வெள்ளை நாட்டரிசி 04 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 180 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.