சட்ட ரீதியாகவே தேர்தல் அறிவிக்கப்பட்டது: தேர்தல் ஆணைக்குழு தலைவர்

0
167

அரசமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்துக்கு அமைய சட்ட ரீதியாகவே உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இன்று தேர்தல் ஆணைக்குழு கூடி இறுதித் தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக குறிப்பிட்ட நிமால் புஞ்சிஹேவா தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களின் இணக்கப்பாட்டுடன் சட்டரீதியாகவே உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது என குறிப்பிட்டார்.

நேற்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தேசிய தேர்தல் ஆணைக்குழு சட்டபூர்வமாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை என கூறியிருந்த நிலையிலேயே தேர்தல் ஆணைக்குழு தலைவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.