அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் – ஜனாதிபதி இடையில் இன்று சந்திப்பு!

0
182

அரசாங்கத்தின் தற்போதைய வரிக் கொள்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளது.

தமது கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதியினால் இந்த பேச்சுவார்த்தைக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும், பேச்சுவார்த்தையின் போது, தங்களுடைய பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என நம்பிக்கை கொள்வதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.