அனுரகுமார உள்ளிட்ட 26 பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!!

0
155

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு இன்று பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சு மற்றும் காலி முகத்திடலை சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்ல தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அத்துடன் கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் போராட்டமொன்று இன்று பிற்பகல் கொழும்பில் நடைபெறவுள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.