சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இளம் வயது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிளிநொச்சியில் இன்று விழிப்புணர்வு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
லிட்டில் ஏய்ட் நிறுவனத்தினரின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலத்திற்கு முன்பாக இந்த விழிப்புணர்வு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புத்தகப்பை சுமக்கும் கையில் கர்ப்பத்தை சுமப்பதா, தாயோடு கைகோர்த்து செல்பவள் செயோடு கைகோர்த்து செல்கிறாள் என பலதரப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டம் இடம்பெற்றது.