இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு அனுமதியில்லை-டக்ளஸ்

0
248

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது எனவும் பாஸ் நடைமுறையும் இல்லை எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு கடற்றொழிலாளர்களுடன் கடற்றொழில் அமைச்சர் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் இந்திய மீனவர்களின் இழுவைப் படகு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.