உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

0
173

வடமேல் மாகாணத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க உள்ளிட்ட நால்வர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளனர்.
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் பத்திநாயக்க உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
புத்தளம் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் செனவிரத்ன, புத்தளம் பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புஷ்பகுமார, புத்தளம் பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ஹேரத் , ஆனமடுவ பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் பண்டார உள்ளிட்டவர்கள் பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.