அம்பாறை கல்முனையில், னித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்களை விற்பனை செய்த 3 உணவகங்களுக்கு தண்டப்பணம்
விதிக்கப்பட்டுள்ளது.
சுகாதார விதிமுறை மீறிய உணவங்கள் தொடர்பான வழக்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்து
கொள்ளப்பட்டது.
சுகாதார விதிமுறைகளை மீறி உணவுப் பொருட்களை விற்பனை செய்தவர்கள் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டபோது, மூன்று உணவகங்களுக்கு எதிராகவும்
முறையே 15 ஆயிரம், 10 ஆயிரம் மற்றும் 5 ஆயிரம் ரூபா தண்டபனம் விதிக்கப்பட்டது.