உலக வாழ் கிறிஸ்தவ மக்களால் அனுஸ்டிக்கப்படும் பெரிய வெள்ளி தினம் இன்றாகும்.
யேசுபிரானை சிலுவையில் ஏற்றிய நிகழ்வை நினைவு கூரும் வகையில் இன்று புனித வெள்ளி சிறப்பு ஆராதனைகள் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் புனித மரியன்னை பேராலயத்திலும் பாஷையூர் அந்தோனியார் ஆலயத்திலும் பக்திபூர்வமாக காலை 6.15 மணிக்கு திருச்சிலுவை வழிபாடு நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் பங்குபற்றினர்.