தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பணியாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்குத் தீர்வு கிடைக்கப்பெற்றதால் இந்த பணிப்புறக்கணிப்பினை இன்று கைவிட்டு சேவைக்குத் திரும்பியதாகத் தேசிய நீர் வழங்கல் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் பொறியியலாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னதாக சுகயீன விடுமுறை கொடுப்பனவிலுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வொன்றைப் பெற்றுத்தருமாறு கோரி நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.