உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள், நாளை பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்திக்கவுள்ளனர்.
தவிர்க்க முடியாத காரணிகளால், கடந்த வாரம், பிரதமருடனான சந்திப்பு இடம்பெறவில்லை எனவும், எதிர்வரும் வாரம், கட்டாயம் சந்திப்பு இடம்பெறும் எனவும், தேர்தல் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
நாளை பிரதமருடன் நிச்சயம் சந்திப்பு இடம்பெறும்.
இந்த சந்திப்பின் போது, நிதி நெருக்கடி காரணமாக, எம்மால் அடுத்த கட்டமாக எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்படுகின்றமை தொடர்பில், பிரதமருக்கு தெளிவுபடுத்தப்படும்.
அதனடிப்படையில், எடுக்கப்படும் முடிவுகளுக்கு அமையவே, வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகள், தபால் மூல வாக்கெடுப்பு உள்ளிட்டவை தொடர்பில் தீர்மானிக்க முடியும்.
இது தொடர்பில், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறும்.
அதில், தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்.
என தேர்தல் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.