திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ள அமெரிக்க கப்பல்

0
178

அமெரிக்காவின் யு.எஸ்.என்.எஸ் பிரன்சுவிக், என்ற கடற்படை போக்குவரத்து கப்பல், நேற்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.
இது, அமெரிக்க கடற்படை கட்டளையின் விரைவுப் போக்குவரத்துக் கப்பல் ஆகும்.

துருப்புக்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள், உள்-திரையரங்கு மற்றும் போக்குவரத்தை வழங்கும் திறன் கொண்ட இந்த கப்பலில் 1200 கடல் மைல் தூரத்திற்கு 600 தொன் உபகரணங்களை எடுத்துச் செல்ல முடியும். இதன் சராசரி வேகம் மணிக்கு 25 கடல் மைல்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல், எரிபொருள் நிரப்பலுக்காக திருகோணமலைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.