தமிழர்களின் தொன்மையை சிதைக்கும் வகையில் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட நடவடிக்கை

0
87

வடக்கு, கிழக்கில் தாயகபூமியில் எமது தொன்மையை சிதைக்கும் வகையில் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைளுக்கு எதிராக தமிழ் மக்களை ஒன்றுதிரட்டி போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தயாராகி வருவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளரும் தேசிய அமைப்பாளருமான குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

‘தமிழர்களின் தொன்மையை சிதைக்கும் வகையில் தாயகபூமியில் அரசாங்கமானது பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது.

இதற்கெதிராக மக்கள், அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகளை ஒன்றுதிரட்டி பாரிய போராட்டத்தை முன்னெடுப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வடக்கு, கிழக்கில் பரந்துபட்ட தொடர்ச்சியான போராட்டமாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.