மன்னாரில் இரட்டை மாட்டு வண்டி சவாரிப் போட்டி

0
212

மன்னார் பரப்பாங்கண்டல் இரட்டை மாட்டு வண்டி திடலில், இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டி சிறப்பாக நடைபெற்றது.

புத்தாண்டையொட்டி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டி நேற்று மாலை நடைபெற்றிருந்தது.

மன்னார் மாவட்ட இரட்டை மாட்டு வண்டி சவாரி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த போட்டியில், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 35 ஜோடி காளைகள் பங்கேற்றன.

குறித்த போட்டியானது ஏ,பி,சி,டி,ஈ என்ற 5 பிரிவுகளாக இடம்பெற்றன.

இதன்போது குறித்த போட்டிகளில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.