அரச பயங்கரவாதத்தை பாதுகாப்பதற்கான சட்டமூலத்தையே அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு கொண்டுவர முயற்சிக்கின்றது – அஜித் பி பெரேரா

0
60

அரச பயங்கரவாதத்தை பாதுகாப்பதற்கான சட்டமூலத்தையே இன்று பாராளுமன்றத்துக்கு கொண்டுவருவதற்கு அரசாங்கம் முயற்சிப்பிதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்வதற்கும் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கும் தேவையான சட்டங்களை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைளில் ஈடுபட வேண்டும் என்றே நாம் இந்த அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்;க்கின்றோம்.

இன்று அதிகம் பேசப்படும் விடயமாகவுள்ள உத்தேச புதிய பயங்கரவாத சட்டமூலம் என்பது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.

எவ்வித ஆலோசனைகளும் இன்றி, கலந்துரையாடல்களில் ஈடுபடாது இந்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டுள்ளனர்.

இதன் காரணமாகவே உத்தேச புதிய பயங்கரவாத சட்டமூலம் என்பது இன்று பாரிய பிரச்சினைக்குறிய விடயமாக மாறியுள்ளது.

எவ்வித கலந்துரையாடல்கள், மீளாய்வுக்கு உட்படுத்தாது இந்த சட்டமூலத்தை வரைப்படுத்தியுள்ளனர் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கமானது உத்தியோகப்பூர்வ அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

தற்போது இருக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு பதிலாக அல்லது அந்த சட்டத்தை மாற்றி புதிய சட்டமூலத்தை கொண்டுவருகின்றோம் என்ற போர்வையிலேயே உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை கொண்டு வருகின்றார்கள்.

பயங்கரவாத தடைச்சட்டம் மோசமானது அதனைவிட சிறந்த சட்டமூலமாகவே உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் உள்ளது என்றே இதனூடாகக் கூற வருகின்றார்கள்.

அரச பயங்கரவாதத்தை பாதுகாப்பதற்கான சட்டமூலத்தையே இன்று பாராளுமன்றத்துக்கு கொண்டுவருவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றனர்.

நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக இந்த சட்டமூலம் கொண்டுவரப்படவில்லை. அரச பயங்கரவாதத்தை பாதுகாப்பதற்காகவே இந்த சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளது.

மக்களின் அடிப்படை உரிமைகளை இல்லாதொழிப்பதற்கே இந்த சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளது.