மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கான பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்,
நடைபெற்றது.
பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான வியாழேந்திரன் தலைமையில்
கூட்டம் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் வாசுதேவன் ஏற்பாட்டில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில்,
பிரதேச செயலக பிரிவில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள,; முன்னேற்ற மீளாய்வுகள்
எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள,;சுகாதாரம் ,வீதி அபிவிருத்தி, நீர் வழங்கல் வடிகாலமைப்பு ,மின்சாரம்
போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், மாநகர ஆணையாளர், வைத்திய அதிகாரிகள் ,
கல்வித்திணைக்கள அதிகாரிகள் ,பாதுகாப்பு பிரிவினர் ,அரச திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்