ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் நினைவாக
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நினைவுத் தூபி

0
154

மட்டக்களப்பு காந்திபூங்காவில், மட்டக்களப்பு மாநகர சபையால், ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள
நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சரவணபவனின் தலைமையில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில், சீயோன் தேவாலயம் உட்பட 2019ம் ஆண்டு
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள் உட்பட பலரும் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர்.