மட்டக்களப்பு அமிர்தகழியில் நிர்மாணிக்கப்பட்ட
சிரேஸ்ட பிரஜைகள் பகல் நேர பராமரிப்பு நிலையம் திறப்பு

0
137

முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் நிதி ஒதுக்கீட்டில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அமிர்தகழி கிராம சேவையாளர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட
சிரேஸ்ட பிரஜைகள் பகல் நேர பராமரிப்பு நிலையத்தின் திறப்பு விழா முதியோர் சங்க தலைவர் மயில்வாகனம் அரச ரெத்தினம் தலைமையில் இன்று இடம்பெற்றது.
நிகழ்வில் அதிதிகளாக உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், சமூக சேவை உத்தியோகத்தர் பி.ராஜ்குமார், மாவட்ட முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்
விஸ்வ கொகிலன் ஆகியோர் கலந்து கொண்டு பராமரிப்பு நிலையத்தினை திறந்து வைத்தனர்
நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர், சமூர்த்தி உத்தியோகத்தர் உட்பட அமிர்தகழி முதியோர் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்