டெங்கு நோய்ப் பரவல் குறித்து பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் அறிவிப்பு

0
158

நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், நாடு முழுவதும் அதிக மழைவீழ்ச்சி மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு என்பன இந்த நிலை மேலும் அதிகரிக்க காரணமாக உள்ளது எனவும் அதன் தலைவர் நிஜித் சுமனசேன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மேல்மாகாண சுகாதார திணைக்களம் இன்று முதல் மே மாதம் 2ஆம் திகதி வரை விசேட டெங்குக் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.