மன்னாரில் புகைப்படக் கலை பயிற்சி நெறி

0
191

மன்னார் வாழ்வுதயச் சூழல் பாதுகாப்புப் பிரிவினால் கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று வரை மூன்று நாட்கள் புகைப்படக்கலை பயிற்சி நெறி,
மன்னார் வாழ்வுதய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மன்னார் வாழ்வுதயத்தின் பதில் இயக்குநர் அருட்தந்தை அருள்ராஜ் குரூஸ் தலைமையில், அஸான் டெக்னொலஜி நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பயிற்சியில் புகைப்படக் கருவிகள், அவற்றின் செயற்பாடுகள், புகைப்பட நுட்பங்கள், ஆவணப்படுத்தல், குறும்படம் முதலான பல விடயங்களை உள்ளடக்கி பயிற்சி வழங்கப்பட்டது.

இப்பயிற்சி நெறியில் இலக்கு கிராமங்களான வேப்பங்குளம், சவுத் பார், காத்தான்குளம், மடுறோட் ஆகியவற்றின் இளைஞர் யுவதிகளும், வாழ்வுதயப் பணியாளர்களும் கலந்து பயன்பெற்றுக்கொண்டனர்.