மலையகத்தில் அடை மழை காரணமாக வீடுகள், விவசாய நிலங்கள் பாதிப்பு

0
217

மலையகத்தில் பிற்பகல் வேளையில் பெய்துவரும் அடை மழை காரணமாக வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மரக்கறி தோட்டங்களில் வெள்ளம் பாய்ந்தோடியதால் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நுவரெலியா – கந்தபளை பகுதிகளில் கடும் மழை காரணமாக பெருமளவான மரக்கறி தோட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாதமையே, வெள்ளம் ஏற்பட்டு இந்த விவசாய காணிகள் மூழ்குவதற்கு முக்கிய காரணம் என விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

அத்தோடு, தோட்டங்களை அண்டிய வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக நுவரெலியா – உடபுஸ்ஸலாவ பிரதான வீதியின் போக்குவரத்தும் சில மணித்தியாலங்கள் ஸ்தம்பிதமடைந்திருந்தமை குறிப்பிடதக்கது.