பழங்குடி மக்களின் காணிகளை மீளளிப்பது தொடர்பில் காணிக்கச்சேரி

0
191

திருகோணமலை நல்லூரில் சர்ச்சைக்குரிய பழங்குடி மக்களது உல்லைக்குளக் காணிகளை மீளளிப்பது தொடர்பான காணிக்கச்சேரி நடைபெற்றுள்ளது.

மூதூர் கிழக்கில் நல்லூர் கிராம சேவையாளர் பிரிவில் காணப்படும் உல்லைக்குளத்தில் பழங்குடி மக்களுக்குச் சொந்தமான 9000 ஏக்கர் வயல் காணிகளை கடந்த யுத்த இடப்பெயர்வுகளின்போது தோப்பூரைச் சேர்ந்தோர் அபகரித்துவிட்டதாக குற்றஞ்சாட்டிய குவேனி பழங்குடி மக்கள் அமைப்பு மற்றும் உள்ளூர் அமைப்புக்கள், விவசாயிகளினால் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் இக் காணிக்கச்சேரி நடாத்தப்பட்டுள்ளது.

காணியுரிமையாளர்களுக்கு காணிகளை மீளளிப்பது தொடர்பாக, நல்லூர் பொதுநோக்கு மண்டபத்தில் மூதூர் பிரதேச செயலாளர் தலைமையில் காணிக்கச்சேரி நேற்று நடைபெற்றது.

இதன்போது தமது காணிகளுக்காக விண்ணப்பித்திருந்த 90 விவசாயிகளது காணிகள் தொடர்பான ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.