வெசாக் பௌர்ணமி தினத்தையொட்டி வெசாக் வாரமானது நாளைய தினம் வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பின் பல பகுதிகளில் வெசாக் நிகழ்வுகள் மிக சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கொழும்பின் தெமட்டகொடை, கங்காராமை, அத்துருகிரிய, மஹரகம, கொட்டாவை ஆகிய பகுதிகளில் பாரிய பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பந்தல்களை பார்வையிடுவதில் மக்கள் ஆரவாரத்துடன் ஈடுபட்டு வருகின்றன.
கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாற்றை கூறும் வகையிலான பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் வெளிச்சக்கூடுகளும் வெசாக் வலயங்களை அலங்கரித்துள்ளன
இதற்கமைவாக கொழும்பு அத்துருகிரிய, மஹரகம மற்றும் கொட்டாவை ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள பாரியளவிலான வெசாக் பந்தல்களை மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டதை அவதானிக்க முடிந்தது.
இந்தப் பந்தல்கள் ஒருவாரத்துக்கு காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னர் இம்முறையே வெசாக்கானது சிறந்த முறையில் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பின் பிரதான நகரங்களில் மாலை வேளைகளில் தானசாலைகள் அமைக்கப்பட்டு தானம் வழங்கப்படுகின்றன.
தானசாலைகளில் மக்கள் நிரம்பி வழிவதையும் அவதானிக்க முடிகின்றது.