வவுனியா சாலை ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில்!

0
145

தனியார் பேருந்து ஒன்று வழித்தடம் இல்லாமல் பயணிகளை ஏற்றி இறக்குவதால் ஏற்பட்ட முரண்பாட்டால், இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையினர் இன்றையதினம் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக தனியார் பேருந்து ஒன்று, தமது சேவைக்கு முரணான வகையில் சேவையில் ஈடுபடுவதாக வவுனியா சாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தமக்கு எதிராக, தமது காப்பாளர் தாக்கியதாக பொய்யான வழக்கு ஒன்றை பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் அவர்கள் பதிவு செய்திருந்ததாகவும், அவ்வாறு தாக்குதல் எதனையும் தாம் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ள ஊழியர்கள், பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி பக்கச்சார்பாகவே செயற்படுகின்றார் எனவும், அந்த பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கான தீர்வு கிடைக்காவிடில் நாளையதினம் மாகாணம் தழுவிய பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்போம் என்றும் வவுனியா சாலையினர் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.