அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம்

0
182

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் பிரதேச செயலாளர் வி.பபாகரனின் ஒருங்கிணைப்பில்,
அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யு.டி.வீரசிங்க தலைமையில் இன்று நடைபெற்றது.
பிரதான வேலைத்திட்டங்களான வீதி அபிவிருத்தி வீடு புனரமைப்பு சுகாதார மேம்பாடு வாழ்வாதார வேலைத்திட்டமான,
ஆடு வளர்ப்பு, சமுர்த்தி அபிவிருத்தி திட்டங்கள் என 589 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில்
இதற்காக ஒதுக்கப்பட்ட 156 மில்லியன் ரூபாவும் 100 வீதமாக செலவு செய்யப்பட்டமையும் தெளிவுபடுத்தப்பட்டதுடன்
இதற்கும் மேலதிகமாக சில வேலைத்திட்டங்களும் இடம்பெற்றமை சுட்டிக்காட்டப்பட்;டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளில் 2021 ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட
அனைத்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் நூறு வீதம் பூர்த்தி செய்யப்பட்டதுடன்
கிடைக்கப்பெற்ற அனைத்து நிதிகளும் பயன்படுத்தப்பட்டதாக அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பாராளுமன்;ற உறுப்பினர்களான டபிள்யு.டி.வீரசிங்க மற்றும் த.கலையரசன் உள்ளிட்டவர்களின் ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களும் வெளியிடப்பட்டன.
விவசாய பாதைகள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி குடிநீர் திட்டம் தொடர்பாகவும் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
யானை பிரச்சினை, குடிநீர்ப்பிரச்சினை, பிரதேச சபை தொடர்பான சில பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாக பாராளுமன்;ற உறுப்பினர்களான டபிள்யு.டி.வீரசிங்க மற்றும் த.கலையரசன் ஆகியோர் இணக்கம் தெரிவித்தனர்.
கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் இணைப்பாளர்கள், பிரதேச செயலக உயர் அதிகாரிகள், உள்ளிட்ட உத்தியோகத்தர்கள்,
சமூக அமைப்புக்கள், மற்றும் பாடாசாலை அதிபர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.