இலங்கையின் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், ஜப்பான் மற்றும் சிங்கப்பூருக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளவுள்ளார்.
அதன்படி நாளைய தினம் நாட்டில் இருந்து ஜனாதிபதி புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விஜயத்தின் போது சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோரை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம், கடன் மறுசீரமைப்பு செயல்முறை, முதலீட்டு வாய்ப்புகள் குறித்து சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் தலைவர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார்.