கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த பல்வேறு திருட்டுச் சம்பவங்களின் பிரதான சூத்திரதாரியாகச் செயற்பட்ட சந்தேக நபர்
கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்க ஆபரணங்கள், கையடக்க தொலைபேசிகள், மடிக்கணணிகள், மோட்டார் சைக்கிள் என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார்
தெரிவித்தனர்.
மட்டக்களப்பு, கல்முனை மற்றும் திருகோணமலையில் பதிவாக 10 திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸார்,
சந்தேக நபரை இனங்கண்டதையடுத்து, கிளிநொச்சிக்கு விஜயம் செய்து சந்தேக நபரைக் கைது செய்தனர்.
சந்தேக நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
Home கிழக்கு செய்திகள் கிழக்கில் திருடியவரை, வலைவீசி கிளிநொச்சியில் கைது செய்தனர் மட்டக்களப்பு பொலிஸார்!