மட்டக்களப்பில் புனரமைப்புச் செய்யப்பட்ட இரு வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

0
163

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் மாலையர்கட்டு மற்றும் கோவில்போரதீவு ஆகிய இரு இடங்களில், புனரமைப்புச்
செய்யப்பட்ட இரண்டு வீடுகள் உத்தியோக பூர்வமாகஉரிய பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
தன்னார்வ தொண்டு நிறுவனமாக செயற்பட்டு வரும் வன்னிஹோப் நிறுவனத்தின் உதவியுடன் இவ்விரு வீடுகளும் புனரமப்பு செய்து கையளிக்கப்பட்டது.
நிகழ்வில் வன்னிஹோப் நிறுவனத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் எம்.ரி.பாரீஸ், மற்றும் அதன் இணைப்பாளர்கள், போரதீவுப் பற்று பிரதேச செயலக
அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.