மட்டக்களப்பு ஏறாவூர் நகரசபை மற்றும் பொது நூலகங்கள் இணைந்து நடாத்தும் மாணவர்களுக்கிடையிலான அறிவுக் களஞ்சியம் வினா விடை போட்டியின்,
முதலாவது போட்டி ஏறாவூர் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர் றிப்கா கலந்து கொண்டார்.
நகரசபை செயலாளர் ஹமீம் தலைமையில் இடம்பெற்ற வினா விடை போட்டியில், ஏறாவூர் நகரசபைக்குட்பட்ட 08 பாடசாலைகள் பங்குபற்றியதோடு முதற் சுற்றில்
அறபா வித்தியாலயம், அல் முனீறா பாலிகா மகா வித்தியாலயம், அலிகார் தேசிய பாடசாலை, கலைமகள் வித்தியாலம் ஆகிய பாடசாலைகள் வெற்றி பெற்று
அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
2023- ஒக்டோபர் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மாதாந்தம் இப்போட்டி நடாத்தப்படவுள்ளதுடன், பங்குபற்றும் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
அத்துடன் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் பாடசாலை ‘ஜீனியஸ் ஒவ் த மன்ந்’ விருது வழங்கி கௌரவிக்கப்படுவதுடன், ஒரு மாதத்திற்கு தேசிய செய்திப்
பத்திரிகையொன்றினை இலவசமாக பெற்றுக் கொள்ளும் வாய்ப்பினையும் பெறவுள்ளதாக, சன சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஹாறூன் தெரிவித்தார்.
ஏறாவூர் நகரசபையின் கணக்காளர் புஷ்ரா, ஏறாவூர் பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர் ராஜமோகன், ஏறாவூர் வர்த்தக சங்க தலைவர் அல்ஹாஜ் வை.எல்.எம் சலீம்,
செயலாளர் அல்ஹாஜ் எம்.ஐ.ஏ நாசர், பொருளாளர் அல்ஹாஜ் எம்.பீ.எம் றிஸ்வி மிஷாரி, பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் என
பலர் கலந்து கொண்டனர்.
இவ்வினா விடை போட்டியின் பிரதான நடுவராக ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் நஸீர் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது