மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெடியவட்டை பகுதியில், இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்
மற்றொவர் படுகாயமடைந்துள்ளார்.
சின்னவத்தையில் உள்ள ஆலய உற்சவம் ஒன்றுக்கு சென்றுகொண்டிருந்தபோதே இவ் விபத்து சம்பவித்துள்ளது.
வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் விபத்தினை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் 35ஆம் கொலனி, பக்கியல்ல பகுதியை சேர்ந்த, சச்சி எனும் 19வயது இளைஞன் உயிரிழந்ததுடன், அதே பகுதியை சேர்ந்த லோஜன் எனும்
23 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையிலிருந்து, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.