புகையிரத பயணங்களில் புது வகை திருட்டு, பயணிகள் அவதானம்!

0
104

புகையிரத பயணங்களின் போது பயணிகளின் பயணப் பொதிகளை எடுத்துக் கொண்டு, வேறு பயணப்பொதிகளை வைத்து செல்லும் புது வகையான திருட்டு இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

கடந்த சில நாட்களாக இடம்பெறும் இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பில் பயணிகள் அவதானமாக இருக்க வேண்டும் என இலங்கை புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் பிரதிச் செயலாளர் சிந்தக சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

பயணிகள் அதிகமுள்ள பெட்டிகளுக்குள் ஏறும் இந்த ஏமாற்ற கும்பல், போலியான பயணப்பொதிகளை வைத்து விட்டு, பயணிகளின் பயணப் பொதிகளை எடுத்துச் செல்வதாக தெரியவந்துள்ளது என புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.