அம்பாறை திருக்கோவிலில் பயனாளிகளுக்கு புதிய வீடுகள் கையளிப்பு

0
243

அம்பாறை திருக்கோவில் மண்டானை கிராமத்தில் காணி மற்றும் வீடு இல்லாமல் வாழ்ந்து வந்த ஜந்து
குடும்பங்களுக்கு புதிய வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன
கனடா சீடர்ஸ் சமூக மேம்பாட்டு அமைப்பின் ஒழுங்கமைப்பில், கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழ்
மக்களின் நிதி பங்களிப்புடன், சுமார் 13 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிதியுதவியில் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் கலந்து கொண்டு பயனாளிகளிடம்
வீட்டினை கையளித்தார்.
திருக்கோவில் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன், கனடா சீடர்ஸ் அமைப்பின் பிரதிநிதி திருமதி சுபாஜினி
கிரிதரன், சமூக செயற்பாட்டாளர் எஸ்.நந்தகுமார், கிராம சேவை உத்தியோகத்தர் எஸ்.சடாச்சரம், பொருளாதார
அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.முரளிதரன், பொது மக்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.