கிழக்கு மாகாண காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நே.விமல்ராஜ் மீது பல
குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு கடமையில் இருந்து இடைநிறுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற கட்டளையின்
பிரகாரம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார் .
மீண்டும் பதவியினை பெற்றுக்கொண்ட பணிப்பாளரை வரவேற்கும் முகமாக, மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முன்பாக
ஒன்று கூடிய மாவட்ட சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் என
பலர்; கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்து வரவேற்றதுடன் தமது பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
Home கிழக்கு செய்திகள் கிழக்கு மாகாண காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டு.மாவட்ட பணிப்பாளர் கடமைகளை பொறுப்பேற்றார்