மன்னம்பிட்டி பேருந்து விபத்தில் ஏறாவூரைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட மூன்று பேர் உயிரிழப்பு!

0
155

மன்னம்பிட்டி பேருந்து விபத்தில், மட்டக்களப்பு ஏறாவூர் அரபா வித்தியாலயத்திற்கு அருகில் வசித்து வரும் மஃரூப் ,ஏறாவூர் ஆலையடி வீதியில் வசித்து
வரும் முனாஸ் ஆகியோர் உயிரிழந்த நிலையில், 3 பிள்ளைகளின் தாயான ஏறாவூர் விதானையார் வீதியைச் சேர்ந்த கபீலா வீவி என்பவர் பொலனறுவை
வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
நேற்றிரவு கதுருவலையிலிருந்து கல்முனையை நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் இவர் பயணித்ததுடன், குறித்த பாலத்தில் விழுந்து பேருந்து
விபத்துக்குள்ளானதில்,இது வரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது