காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினூடாக புனித ஹஜ் கடமையை நிறைவேற்றிய ஹாஜிமார்களுக்கான ஒன்று கூடல் நேற்று இரவு இடம்பெற்றது.
காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினூடாக இவ்வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றிய ஹாஜிமார்களின் நலன்கள், ஹஜ் காலத்தில் சம்மேளனம் வழங்கிய சேவைகள் பற்றி கேட்டு அறிந்து கொள்ளப்பட்டது.
சம்மேளனம் சிறப்பான ஹஜ் சேவைகளை வழங்கியதாக ஹாஜிமார் தெரிவித்தனர்.
ஹஜ் வழிகாட்டியாக சென்ற மௌலவி பாயிஸ், முகாமையாளராக சென்ற அல் ஹாபிழ் நாசர் ஆகியோரை ஹாஜிமார் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
சம்மேளன தலைவர்.ரஊப் ஏ மஜீத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சம்மேளன செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபீல் நழீமி உட்பட சம்மேளன ஹஜ் குழு உறுப்பினர்கள் ஹாஜிமார்கள் கலந்து கொண்டனர்.