மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள, பாலமுனை புர்கான் பள்ளி வாயல் சுற்று மதில்களில் உள்ள மின் குமிழ்களை நேற்று இரவு சேதப்படுத்திய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூன்று சந்தேக நபர்கள் பள்ளி வாயலின் சுற்றுமதிலில் பொருத்தப்பட்டிருந்த மின் குமிழ்களை உடைத்து சேதப்படுத்தியதோடு, வீதியினால் சென்ற ஒருவரையும் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி காரியவசம் தலைமையில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரஹீம் உட்பட பொலிஸார் அவ்விடத்தில் ஏற்பட்ட பதற்ற நிலையை தனித்து நிலைமையை சுமூகமாக்கி விசாரணைகளை ஆரம்பித்தனர்.
விசாரணைகளின் போது பிரதான சந்தேக நபரை கைது செய்யப்பட்டுள்ளார்.
பள்ளி வாயலுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.