கனரக வாகனங்களைக் கட்டுப்படுத்தக் கோரி வாகரையில் போராட்டம்

0
120

மட்டக்களப்பு வாகரை ரிதிதென்ன புதிய கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
தங்களது பிரதேச வீதியூடாக மண் கொண்டு செல்லும் கனரக வாகனங்களை நிறுத்தி தருமாறிக் கோரியும்,
கடந்த சனிக்கிழமையன்று 6 வயது சிறுவன் ஒருவர் தண்ணீர் பவுசரில் சிக்கி உயிரிழந்தமையைக் கண்டித்தும் இக்
கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஓமடியாமடு,றிதிதென்ன ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் பங்கெடுத்தனர்.
தண்ணீர் பவுசரில் சிறுவன் சிக்கிய இடத்திலிருந்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு,
றிதிதென்ன கொழும்பு வீதியில் முடிவுற்றது.
சுமார் 3 மணித்தியாலங்கள் போராட்டம் வரை நீடித்தது.
இதனால் குறித்த வீதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.