அத்தியாவசியமான பகுதிகளுக்கு மாத்திரம் கால்நடை வைத்தியர்களை நியமிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கால்நடை வைத்தியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கால்நடைகள் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தின் சில இடங்களில் கால்நடை வைத்தியர்களுக்கான தேவை காணப்படாத கால் நடை வைத்தியர்கள் பணியாற்றுவதாக அந்த சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறான கால்நடை வைத்தியர்களை தேவை காணப்படுகின்ற பகுதிகளில் சேவையில் ஈடுபடுத்துமாறும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.