மலையக எழுச்சி பேரணி இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!

0
220

‘வேர்களை மீட்டு உரிமைகளை வென்றிட’ எனும் தொனிப் பொருளில், மலையக எழுச்சி பேரணி இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது.

தலைமன்னார் முதல் மாத்தளை வரை ஆரம்பிக்கப்பட்டுள்ள பேரணிக்கு வலுச்சேர்க்கும் நோக்கில், யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட பேரணி, வவுனியா வரை செல்லவுள்ளது.

மதத்தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலர் பேரணியில் கலந்து கொண்டனர்.