பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், தற்காலிக பிரதமராக பலூசிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் உல் ஹக் ககர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் பதவியில் இருந்து விலகும் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராஜா ரைஸ் அகமது இணைந்து தற்காலிக பிரதமராக அன்வர் உல் ஹக் ககரை நியமித்துள்ளனர்.
அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படும்வரை அன்வர் தற்காலிக பிரதமராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக பிரதமர் நியமனத்திற்கு பாகிஸ்தான் ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார்.