விசேட தேவையுடையோர் நலன்புரிக்காக ஒதுக்கப்படும் கொடுப்பனவுகளை இந்த ஆண்டு முதல் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
விசேட தேவையுடையோருக்கான கல்வி உதவித் தொகை 10 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்படும்.
விசேட தேவையுடையோருக்கான சுயதொழில் உதவித்தொகை 25 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்படும்.
விசேட தேவையுடையோருக்கான உபகரணங்களுக்காக வழங்கப்படும் 15 ஆயிரம் உதவித் தொகை 35 ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்பட்டும்.
விசேட தேவையுடையோருக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்காக வழங்கப்படும் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா உதவித்தொகை 5 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படும்.
விசேட தேவையுடையோர்களின் வீடுகளை புனரமைக்க வழங்கப்பட்ட 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா உதவித்தொகை 2 இலட்சத்து 50 ஆயிரம் ருபாவாக உயர்த்தப்படும்
விசேட தேவையுடையோருக்காக கழிப்பறை கட்ட வழங்கப்படும் உதவித்தொகை ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார்.