![Asian baby was sick as Respiratory Syncytial Virus (RSV) in kid hospital. Thai little girl having inhaler containing medicine for stop coughing and disease flu.](https://eelanadu.lk/wp-content/uploads/2023/08/சிறுவர்களுக்கு-மூச்சுத்திணறல்-அதிகரிப்பு-696x440.jpg)
நாடாளாவிய ரீதியில் வறண்ட காலநிலை மற்றும் தூசி காரணமாக சிறுவர்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் வயிற்றுப்போக்கு தற்போது அதிகரித்து வருவதாக பொரளை ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் மருத்துவமனையின் குழந்தை நல வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
மூச்சுத்திணறல் உள்ள குழந்தைகளுக்கு இருமல் ஏற்படுவதுடன் மூச்சு விடுவதில் சிரமமும் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிகுறிகள் தென்பட்டால் எவ்வித அச்சமும் இன்றி தமது பிள்ளைகளை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லுமாறு பெற்றோர்களிடம் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.