கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய, கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள மாவட்ட அலுவலகமும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து அம்பாறை கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடமாடும் சேவையினை நடாத்தின.
பற்சிகிச்சை, கண்பரிசோதனை, தொற்றா நோய் பரிசோதனைகள், ஆயுர்வேத மருத்துவ சேவைகள் , உடல் நிறை குறியீடு பார்த்தல் ,இரத்த அழுத்தம் நீரிழிவு நோய்க்குரிய பரிசோதனைகள், போன்ற பல்வேறு மருத்து பரிசோதனைகள் இடம்பெற்றன.
மாற்றுத் திறனாளிகளுக்கான சுகாதார சேவைகளுக்குத் தகுதியுடையவர்களுக்கான நோய்க் கொடுப்பனவுக்கான விண்ணப்ப விநியோகமும் இடம்பெற்றது.
கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி ,கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் முஹம்மத் அஸ்மி, கல்முனை பிராந்திய வாய்ச்சுகாதார நிபுணர் எம்.எச்.எம் சரூக் உட்பட பலரும் நடமாடும் சேவையில் பங்கேற்றனர்.